இந்தியாவில் பணி ஓய்வு பெறக்கூடிய மத்திய அரசு ஊழியர்களுக்கான சிடிஜி (Composite Transfer Grant) மானியத்துக்கான வரம்பை நீக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் சிடிஜி என்றால் பணி ஓய்வு பெறக்கூடிய அரசு ஊழியர் வேறு ஊருக்கு செல்ல அவர்களுக்கு தேவையான நிதி உதவியை அரசே வழங்குவது ஆகும். இருப்பினும் கடைசியாக வேலை செய்த ஊரில் அல்லது அந்த ஊரில் இருந்து 20 கிலோ மீட்டருக்குள் செட்டிலானால் சிடிஜி தொகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அரசு வழங்கும். சிடிஜி என்பது அரசு ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 80 சதவீதம் ஆகும். 20 கிலோ மீட்டர் வரம்புக்கு மேல் செட்டிலானால் முழு சிடிஜியும் கிடைக்கும்.
அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவு போன்ற பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் முழுவதும் சிடிஜியாக வழங்கப்படும். இந்த நிலையில் 20 கிலோ மீட்டருக்குள் செட்டிலாகும் அரசு ஊழியர்களுக்கான சிடிஜி வரம்பை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது பணி ஓய்வு பெறும் அரசு ஊழியர் 20 கிலோ மீட்டருக்குள் செட்டிலானாலும் முழு சிடிஜியும் வழங்கபடும். இதற்கான குறிப்பாணையை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஆகவே பணி ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு இதுவொரு நிம்மதியான செய்தியாக வெளியாகியுள்ளது.