Categories
சினிமா தமிழ் சினிமா

“போலீஸ் கையை வெட்ட பிளான்?”…. பிரபல நடிகர் மீது பாய்ந்த வழக்கு…. திரையுலகில் பரபரப்பு….!!!!

மலையாள நடிகர் திலீப் கடந்த 2017-ஆம் ஆண்டில் பிரபல நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால் ஒட்டுமொத்த திரைத்துறையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானது. அந்த வழக்கே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் நடிகர் திலீப் தற்போது இன்னொரு வழக்கில் சிக்கியுள்ளார். அதாவது தன்னை கைது செய்த எஸ்பி சுதர்சனனின் கையை வெட்டுவதற்காக நடிகர் திலீப் குடும்பத்துடன் சேர்ந்து திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

அதேபோல் பிரபல நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை நடிகர் திலீப் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்து வருவதாகவும் அவரது நண்பர் இயக்குநர் பாலச்சந்திர குமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதனால் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள காவல்துறையினர் நடிகர் திலீப் மீது மேலும் ஒரு எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |