Categories
சினிமா தமிழ் சினிமா

“வெளியான மாஸ் அப்டேட்!”…. ரஞ்சித்-விக்ரம் இணையும் படத்தின் கதை….. இதுதானா?!!!!

திரையுலகில் செம பிஸியாக வலம் வரும் நடிகர் விக்ரம், ரஞ்சித் இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியானது. இதற்கு முன்னதாக ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் மாபெரும் வெற்றியை கண்டதால் விக்ரம் மற்றும் ரஞ்சித் இணையும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும் விக்ரம் மற்றும் ரஞ்சித் இணையும் இந்த படம் யாஷ் நடிப்பில் வெளிவந்த KGF படத்தை போலவே முழுக்க முழுக்க ஆக்க்ஷன் படமாக உருவாக்கப்பட உள்ளதாம். கோலார் தங்க சுரங்கம் தொடர்பான கதைக்களத்தில் இந்த படம் உருவாக்கப்பட உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ‘மெட்ராஸ்’ படத்திற்கு முன்பே இந்த கதையை ரஞ்சித் எழுதி விட்டாராம். ஆனால் இன்னும் இந்த படத்திற்கு பெயரிடப்படாத நிலையில் ஜி.வி.பிரகாஷ் அல்லது அனிருத் படத்திற்கு இசையமைப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

Categories

Tech |