அமெரிக்காவில் மாற்று இதயம் கிடைக்காமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 57 வயது நபருக்கு அந்நாட்டின் மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியதை தொடர்ந்து அவருக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வசித்து வந்த 57 வயதாகின்ற டேவிட் பென்னட் என்பவர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டேவிட் மாற்று இதயம் கிடைக்காமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வேளையில் அமெரிக்காவின் மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பு அவருக்கு சிறப்பு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி டேவிட்டிற்கு மருத்துவர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்தியுள்ளார்கள். இந்த அறுவை சிகிச்சை செய்துகொண்ட டேவிட் தற்போது உடல் நலம் தேறி நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.