உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் காங்கிரஸும் பாஜகவும் கடும் போட்டியில் உள்ளன.
உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளன. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பாஜக மற்றும் காங்கிரஸ் இரு கட்சிகளும் கடும் பலத்துடன் மோதலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் பாஜகவுக்கு 40 சதவீத வாக்குகள் கிடைக்கலாமாம். காங்கிரஸுக்கு 36 சதவீத வாக்குகள் கிடைக்குமாம். ஆம் ஆத்மி கட்சிக்கு 13 சதவீத வாக்குகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு மொத்தமாக 11 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனவும் சீட்டுகள் எண்ணிக்கையில் பார்த்தால் 70 பேர் கொண்ட சட்டசபையில் பஜாகவுக்கு 33 முதல் 39 சீட்டுகள் கிடைக்கலாமாம். காங்கிரஸ் கட்சிக்கு 29 முதல் 35 சீட் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ஆம் ஆத்மி கட்சிக்கு 1 முதல் 3 சீட் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும்.பாஜகவின் செல்வாக்கு சரிந்துள்ளதாகவும் இந்த சர்வே தெரிவிக்கிறது. கடந்த 2017 சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் செல்வாக்கு 46.5 சதவீதமாக இருந்தது.
ஆனால் தற்போது அது 38.6 சதவீதமாக குறைந்துள்ளது. முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஹரீஷ் ராவத்துக்கு முதல்வர் பதவிக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. அதாவது 37 சதவீதம் பேர் ராவத்துக்கு முதல்வர் பதவியைத் தர ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போதைய முதல்வரான பாஜகவின் புஷ்கர் சிங் தமிக்கு 29 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது.2017 சட்டசபைத் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சிக்கு மொத்தம் 57 இடங்களில் வெற்றி கிடைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்களே கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது