Categories
தேசிய செய்திகள்

வருமான வரி வரம்பு உயர்வு…. அரசின் முடிவு என்ன?…. வெளியான தகவல்….!!!

மத்திய நிதியமைச்சகம் 2022-2023 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் பிப்ரவரி  மாதம் செய்யப்படவுள்ளது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சிக்கல் உள்ளது. அதாவது நடுமுழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமிக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. எனவே அதற்கேற்ப பட்ஜெட்டில் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்துவதற்கு மத்திய அரசு ஆலோசனை செய்துவருவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

அதன்படி சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கு ரூ.50,000 மற்றும் பென்சன்தாரர்களுக்கு 35% சதவீதம் வரி விலக்கு உயர்த்துவதற்கு  ஆலோசனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கொரோனா காலகட்டத்தில் மருத்துவ செலவுகள் அதிகரித்து வருவதால் தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு 30% முதல் 35% வரை உயர்த்த வேண்டும் என்று பல  கோரிக்கைகள் வருகிறது. எனவே தற்போது கொரோனா 3 வது அலை தொடங்கிவுள்ளதால், இது குறித்து அரசுதீவிர ஆலோசனை செய்து வருகிறது. மேலும் அண்மை வரி வசூல் நிர்வாகத்திற்கு ஏற்ப அரசு முடிவெடுக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Categories

Tech |