சீனாவில் அதிகரிக்கும் கொரோனாவை தடுக்கும் பொருட்டு அந்நாட்டிலுள்ள அன்யாங் நகரில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் முதன்முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இது ஒரு பக்கமிருக்க சீனாவிலேயே மீண்டும் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஆகையினால் சீனா ஏற்கனவே ஷியான் மற்றும் யூசோவ் போன்ற நகரங்களில் பொதுமக்கள் எவரும் வெளியே வராதபடி முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கொரோனா மிக வேகமாக அதிகரித்து வரும் மற்றொரு நகரமான அன்யாங்கிலும் சீனா முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.