தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உட்பட பல்வேறு பணிகளுக்காக குறிப்பிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நடத்தப்படுவது வழக்கம். அவ்வகையில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சில பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மின் பராமரிப்பு பணி காரணமாக மதுரை மாவட்டம் ஆணையூர், மேலவளவு, திருவாதவூர் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வீரசோழன் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மறையூர், வேலங்குடி, ஒட்டங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
சென்னையில் செம்பரம்பாக்கம் பகுதி, டைடல் பார்க்/எஸ்.ஆர்.பி டூல்ஸ் ஒ.எம்.ஆர் பகுதி, மாதவரம் பகுதி, செங்குன்றம்/பாடியநல்லூர் பகுதி, போரூர்/எஸ்.ஆர்.எம்.சி பகுதி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட முண்டியம்பாக்கம், அய்யூர் அகரம், பனையபுரம், கயத்துார், பனப்பாக்கம், அடைக்கலாபுரம், ஆவுடையார்பட்டு, ரெட்டிக் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் துணை மின் நிலையம் மற்றும் பழங்கரை துணை மின் நிலையத்துக்குடப்ட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் துணை மின் நிலையத்திற்குட்பட்ட வில்பட்டி, வடகவுஞ்சி, சவரிக்காடு, மன்னவனூர், பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான கோட்டையூர், வண்டல், அளவிடங்கான், பூலாங்குடி, புதுக்கோட்டை, சமுத்திரம், விரையாதகண்டன் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் வினியோகம் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடித்த பிறகு மின் விநியோகம் செய்யப்படும்.