Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

3 1/2 கோடிக்கு விற்பனை….. மும்முரமாக நடைபெற்ற ஏலம்…. மகிழ்ச்சியடைந்த விவசாயிகள்….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 3 1/2 கோடி வரை விற்பனை நடைபெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 9,100 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 11,001 ரூபாய்க்கும், அதிக பட்ச விலையாக 16,000 ரூபாய்க்கும், ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு 9,079 ரூபாயில் இருந்து 11,891 ரூபாய்க்கும், கொட்டு ரக பருத்தி 4,800 ரூபாயில் இருந்து 6,700 ரூபாய் வரை ஏலம் விடப்பட்டது. அதன்படி மொத்தம் 3 1/2கோடி வரை பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது.

Categories

Tech |