Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்…. இனி யாராவது இந்த வீடியோ போட்டா அவ்வளவுதான்….. அமைச்சர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பொங்கல் பரிசு பொருட்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு சர்ச்சை வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து விஷமத்தனமான வீடியோ வெளியிட்டு பொய் பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் முதல் பெரும்பான்மையான மக்கள் வரை பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமாக இல்லை என்று கூறி வரும் நிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனால்  பொங்கல் பரிசு தொகுப்பு தரமாக இல்லை என்றால் ஆதாரத்துடன் நேரில் வந்தால் நடவடிக்கை எடுக்க தயார் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |