Categories
தேனி மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பொருட்கள்…. 7 கடைகளுக்கு அபராதம்…. அதிகாரிகள் திடீர் சோதனை….!!

கடைகளில் சட்ட விரோதமாக விற்பனை செய்த 268 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் காலாவதியான உணவு பண்டங்கள்  விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் உத்தரவின்படி மாவட்ட நியமன அலுவலர் ராகவன் தலைமையில் அதிகாரிகள் போடி நகர், காமராஜர் சாலை போன்ற பகுதிகளில் உள்ள 35க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது சுமார் 7 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், புகையிலை மற்றும் உணவுப் பொருட்கள் கலக்கும் ரசாயன கலர் பவுடர் ஆகியவை 268 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதனை விற்பனை செய்த 7 கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை நகராட்சி கிடங்கில் தீ வைத்து அழித்துள்ளனர். இந்த ஆய்வின் போது நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சரண்யா, மணிமாறன், சக்தீஸ்வரன், சுரேஷ் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Categories

Tech |