பஞ்சுமில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூமலூர் பகுதியில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான பஞ்சுமில் உள்ளது. இந்த பஞ்சு மில்லில் வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பஞ்சு மில் எந்திரத்தில் தீப்பொறி ஏற்பட்டு சற்று நேரத்தில் தீப்பற்றி எரிந்தது.
இதனை பார்த்த வடமாநில தொழிலாளர்கள், பஞ்சு மில் உரிமையாளர் மற்றும் பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை முற்றிலும் அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 7 லட்ச ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள், எந்திரங்கள் சேதமானது.