Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குறிவைத்து திருடும் கும்பல்…. 4 பேர் அதிரடி கைது…. தனிப்படையினருக்கு பாராட்டு….!!

பூட்டி இருக்கும் வீட்டை குறிவைத்து திருடும் கும்பலை கைது செய்த தனிப்படையினரை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டை பகுதியில் வசித்து வரும் அகமது அலி மற்றும் மும்தாஜ் பேகம் என்பவர்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 67 பவுன் நகை மற்றும் 65 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மும்தாஜ்பேகம் ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில் அந்த மர்ம நபர்கள் தேனியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தனிப்படையினர் தேனிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து ராமநாதபுரத்திற்கு அழைத்து வந்தனர். இதனைதொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் வெளிநாட்டில் வேலை பார்பவர்கள் மற்றும் பூட்டி இருக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளையடிப்பது வெளிவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |