தமிழகத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகின்ற 14ஆம் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையானது தொடர்ந்து 3 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. அதாவது வருகிற 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 15ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் 16ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், உள்ளத்தில் அன்பு பொங்கட்டும், இல்லத்தில் மகிழ்வு பொங்கட்டும் என்றும் தமிழர்களின் உள்ளங்களில் இனிமை பொங்கட்டும், தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நன்மை விளையட்டும் என்றும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பொங்கல் பண்டிகையன்று என்னை நேரில் வந்து சந்திப்பதை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.