தெலுங்கானாவில் கைத்தறி நெசவாளர் ஒருவர் தனது திறமையை வெளிப்படுத்தும் விதமாக, தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் சேலை ஒன்றை நெய்துள்ளார்.
தெலுங்கானா மாநிலமான ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில் வசித்து வரும் நல்லா விஜய் என்ற கைத்தறி நெசவாளர் தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் வகையிலான சேலை ஒன்றை நெய்துள்ளார். இதனை அவர் தெலுங்கானா மந்திரிகள் கே.டி. ராமா ராவ், சபிதா இந்திராரெட்டி, ஸ்ரீனிவாஸ் கவுடா, எர்ரபெல்லி தயாகர் ராவ் போன்றோர் முன்னிலையில் நேற்று காட்சிபடுத்தினார்.
இந்நிலையில் இந்த சேலையை நல்லா விஜய், மந்திரியான சபிதா ரெட்டிக்கு பரிசாக வழங்கியுள்ளார். இவ்வாறு தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் இந்த சேலையை கைகளால் நெய்வதற்கு 6 நாட்கள் வரை ஆகிறது. ஆனால் இயந்திரத்தால் நெய்யும்போது 2 நாட்களில் நெய்துவிடலாம் என்று நல்லா விஜய் தெரிவித்துள்ளார்.
అగ్గిపెట్టెలో పట్టే చీరను నేసిన సిరిసిల్లకు చెందిన యువ నేతన్న నల్ల విజయ్ ఈరోజు హైదరాబాద్లో మంత్రులు @KTRTRS, @DayakarRao2019, @SabithaindraTRS, @VSrinivasGoud సమక్షంలో తను నేసిన చీరను ప్రదర్శించారు. విజయ్ నేసిన ఈ అద్భుతమైన చీరను చూసి మంత్రులు అభినందించారు pic.twitter.com/r4tVA5GvZf
— KTR, Former Minister (@MinisterKTR) January 11, 2022