புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தாராபுரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்துள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் தாராபுரம் பகுதியில் வசிக்கும் ஹரிபிரசாத் மற்றும் சோப்பாராம் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 32 பண்டல்கள் உள்பட மொத்தம் 150 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.