தங்கப் பத்திரம் என்பது, தங்கத்தை நகையாகவோ, நாணயங்களாகவோ முதலீட்டு நோக்கில் மட்டுமே வாங்குவதற்கு சில பேர் விரும்புவார்கள். இது போன்றவர்களை இலக்காக கொண்டு 2015ஆம் வருடம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியதுதான் தங்கப் பத்திரத் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் தங்கத்தை பொருள் வடிவில் வாங்கி கொள்ளாமல் பத்திர வடிவில் வாங்கி விலையேற்ற பலனை பெற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட சில வாரங்களில் தங்க பத்திரங்களை அரசு விற்பனை செய்கிறது.
இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான தங்க பத்திர விற்பனை ஜனவரி 14ஆம் தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே முதலீடு செய்ய நினைப்பவர்கள் தங்க பத்திரத்தில் முதலீடு செய்யலாம். ஒரு கிராம் தங்கம் விலை 4,786 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு நிதியாண்டில் ஒரு கிராம் முதல் 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.