புதுச்சேரியில் 25 வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி இளைஞர்களிடையே தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும், மத நல்லினக்கணம் மற்றும் சகோதரத்துவ உணர்வை பரப்பும் வகையில் நடத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து பேசிய பிரதமர், நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்குதான் மிக முக்கியமாகும். ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நம்பிக்கையுடன் எதிர் நோக்கியுள்ளது.
இந்தியா இன்று எதைச் சொல்கிறதோ அதை தான் நாளை உலகம் சொல்லும். இதனை தொடர்ந்து நவீனத்தை பேசுவதால் தான் இந்தியா என்றும் இளமையாக உள்ளது. இந்தியாவில் வளம் மற்றும் பாராம்பரியம் அன்றாட வாழ்வில் எதிரொலிக்கிறது. உலகத்திலேயே இந்தியாவில்தான் அதிக இளைஞர்கள் உள்ளனர். எனவே இளைஞர்கள் தான் புதிய உலகத்தை உருவாக்க முடியும். மேலும் இந்திய இளைஞர்கள் மதிப்பீடு செய்வதில் முன்னேற்றம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். நம்முடைய இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.