Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு…. 14 நாட்கள் விடுமுறை…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்கு மத்தியில் அரசு ஊழியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு விடுப்பு உள்ளிட்ட சில சலுகைகளை அரசு அளித்து வருகிறது. ஆனால் இந்த விடுமுறை தொடர்பாக முறையான நடவடிக்கைகள் எதுவும் செயல்படுத்தப்படாத பட்சத்தில் அரசு ஊழியர்களிடையே ஒரு குழப்பமான சூழல் நீடித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் 14 நாட்களுக்கு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அரசு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி மக்களின் குறைகளை தீர்க்கும் முதல்வரின் தனிப்பிரிவு இணையதளத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கணவருக்கு விடுப்பு கேட்டு ஆசிரியை ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தன் கணவருக்கு சொந்த விடுப்பு கேட்கப்பட்டு அரசு ஊழியர் ஒருவர் அறிவுறுத்தி இருந்ததாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது சிறப்பு விடுப்பு உள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த மனுவை ஏற்ற முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளது. அதில், ஒரு அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு 14 தினங்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று செங்கல்பட்டு முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறை கடிதத்தை சுட்டி காட்டி விளக்கம் தரப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் 2020ல் வெளிவந்த அரசாணையை சுட்டிக்காட்டி சிறப்பு தற்செயல் விடுப்பு மறுக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |