ஆந்திர மாநிலம் சித்தூர் பிரசாந்த் நகரில் நவீனா(31) என்பவர் வசித்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் 2 நபர் மலிவு விலையில் தரமான சோப்பு இருப்பதாக சொல்லி நூதன முறையில் பண மோசடி செய்துள்ளதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில், ரூ.100 க்கு 5 துணி சோப்பு விற்பதாக சொல்லி 2 நபர்கள் வந்தார்கள். அவர்களிடம் ரூ.100 கொடுத்து சோப்புகளை வாங்கினேன். அதன்பிறகு குலுக்கல் முறையில் தனக்கு விழுந்த சீட்டில் வாஷிங், மெஷின், மிக்ஸி, கிரைண்டர், பைக், தோசை தவா என 5 பொருட்கள் பரிசாக கிடைத்துள்ளது என்று அவர்கள் கூறியதால் ஆச்சரியமடைந்தேன். இதையடுத்து தன்னிடமிருந்து வீட்டு முகவரி, செல்போன் எண்களை பெற்று சென்றார்கள்.
அதன்பிறகு மூன்று நாட்களுக்கு பிறகு ரூ.2,00,000 மதிப்பிலான அந்த பரிசு நீங்கள் பெற வேண்டும் என்றால் நாங்கள் சொல்லும் வங்கி எண்ணுக்கு.25,000 செலுத்த வேண்டும் என்று கூறினார்கள். இதை நம்பி நானும் குறிப்பிட்ட வங்கி எண்ணுக்கு பணத்தை அனுப்பினேன். ஆனால் அவர்களிடமிருந்து எந்த தகவலும் வராததால் அழைப்பு வந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் புகார் அளித்துள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து சித்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். அதனைப்போலவே லெனின் நகர் காலனியை சேர்ந்த தீபக் என்பவரும் சோப்பு விற்பவர்களால் ஏமாற்றமடைந்து ரூ.18,000 இழந்திருப்பதாக புகார் அளித்துள்ளார்.