Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வந்ததால் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த வருடம் கொரோனா பரவல் குறைந்ததால் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. அவ்வாறு பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் வழக்கமாக நடைபெறும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பள்ளிக்கல்வித்துறை அரையாண்டு தேர்வை திருப்புதல் தேர்வாக மாற்றி இந்த மாதம் நடத்த அறிவித்திருந்தது.

இதனைதொடர்ந்து ஒமிக்ரான் தொற்று பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் கடந்த ஆண்டை போன்று இந்த வருடமும் பொதுத்தேர்வு ரத்தாகி விடுமோ என்று மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ஜனவரி மாதத்தில் திருப்புதல் தேர்வு தொடங்கி விடும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். அதன்பின் இத்தேர்வுக்கான கால அட்டவணை அண்மையில் வெளியானது.

தற்போது திருப்புதல் தேர்வு திட்டமிட்டவாறு கண்டிப்பாக நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு ஜனவரி 19 ஆம் தேதியிலும் , 12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு ஜனவரி 20 ஆம் தேதியிலும் தொடங்க இருக்கிறது. இந்த தேர்வை நடத்த தற்போது பள்ளிகளில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் நோய் தொற்று காரணமாய் பாதுகாப்பு வழிமுறைகளுடன் திருப்புதல் தேர்வை நடத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.

Categories

Tech |