மகாராஷ்டிரா மாநிலத்தில் தீபம் மௌரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் அடிப்படையில், காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். கடந்த நவம்பர் மாதம் தனது பரப்புரையை தொடங்கிய இவர், இதுவரை 13 இடங்களில் சுமார் 4,500 கிலோமீட்டர் கடந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
இந்தப் பரப்புரையின் போது 45க்கும் அதிகமான நகரங்களில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தவிர்க்கப்பட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். இவருடைய பயணம் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடையும். கரூர் வந்த அவரை ரவுண்ட் டேபிள் சங்கத்தினர் வரவேற்று அழைத்து, பின் அனுப்பி வைத்தனர்.