Categories
சினிமா தமிழ் சினிமா

‘வேற லெவல் நீங்க’ …. புஷ்பா பட ஹீரோவுக்கு கார்த்திக் புகழாரம் ….!!!

‘புஷ்பா’ படத்தை பார்த்த நடிகர் கார்த்தி அல்லு அர்ஜுன்மற்றும் படக்குழுவிற்கு பாராட்டு  தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இப்படத்தில் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் பகத் பாசில் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. அதேசமயம் இப்படத்தை பார்த்த பிரபலங்களும் படக்குழுவிற்கு தங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான கார்த்திக் ‘புஷ்பா’ படத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில்,” அல்லு அர்ஜுன் புஷ்பாவாக  உங்களுடைய நடிப்பை பார்த்து வியந்து விட்டேன்.அரெஸ்ட்டிங் பர்ஃபார்மன்ஸ் என பாராட்டி உள்ளார். நடிகர் கார்த்திக்கின் பதிவை பார்த்த அல்லு அர்ஜுன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நன்றி கார்த்தி காரு, என்னுடைய நடிப்பு, அனைவரின் பணி மற்றும் புஷ்பா உலகம் உங்களுக்கு பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. உங்களின் இதயம் கனிந்த பாராட்டுக்களுக்கு நன்றி”என்று பதிவிட்டுள்ளார் .

Categories

Tech |