Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. 18 மாத DA நிலுவைத் தொகை…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் DA மற்றும் DR உயர்வு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மூன்று தவணைகளுக்குமான DA உயர்வு தொகை ஜூலை 1 ஆம் தேதி முதல் 28 சதவீதமாக அமலுக்கு வந்தது. அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு ஜூலை 1 முதலான தவணைக்கு கூடுதலாக 3% வழங்கப்பட்டு மொத்தம் 37 சதவீதம் அகவிலைப்படி உயர்வு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இவை அனைத்தும் அமலுக்கு வந்துவிட்ட நிலையிலும் இன்னும் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. மத்திய அரசு ஊழியர்களின் DA நிலுவை விரைவில் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூட்டம் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றரை வருடங்களாக நிலுவைத் தொகைக்காக அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது அடிப்படை சம்பளத்தில் 17 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்தப்படும் என நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவின துறை தெரிவித்துள்ளது. 18 மாத நிலுவை தொகை முழுவதும் ஒரே செட்டில்மென்டில் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கவுன்சில் மத்திய அரசிடம் வைத்துள்ளது. 13ம் நிலை ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ. 2,15,900 அல்லது நிலை-14 ஊழியர்களின் டிஏ நிலுவைத் தொகை ரூ. 1,44,200. 2,18,200 கைகளில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |