தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து வந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் ஜனவரி 16 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து தமிழகத்தில் இன்று கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் லேசானது முதல் மிதமானது மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். மேலும் தென்கிழக்கு வங்கக்கடலில் மணிக்கு 50 கி.மீ. காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.