தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வை கருத்தில் கொண்டு நேரடி வகுப்பு நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு கூறியதாவது, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காகவே மாணவர்களை நேரடி வகுப்புகளுக்கு அழைத்ததாக நீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்துள்ளோம். மாணவர்கள் நேரடி வகுப்புகளில் பங்கேற்பது கட்டாயமில்லை. ஆகவே ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக பள்ளிகளே முடிவு எடுக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.