தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகவே அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
மேலும் வழிபாட்டுத் தலங்களுக்கு 14 ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.