தமிழகத்தில் திருவள்ளுவர், அரியலூர், கல்லகுறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகை, நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக்கொண்டார். மேலும் மருத்துவ படிப்பில் ஏற்கனவே இருந்த நடைமுறையைப் பின்பற்ற மத்திய அரசு உதவ வேண்டுமென்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.