நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து பேசிய அவர், இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில் கொரோணா பரவலும் அதிகரித்துள்ளது. எனவே மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தடுப்பூசியை தவிர வேறு எதுவும் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்காது. மாநிலங்களிடம் போதிய கொரோனா தடுப்பூசி கையிருப்புள்ளது. தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.