தம்பி அண்ணனை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழக்கரை கிராமத்தில் முருகேசன்-இந்திரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரவிக்குமார் ,ராம்குமார் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் ரவிக்குமார் குடித்துவிட்டு பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் ராம்குமாரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த ராம்குமார் தனது வீட்டில் இருந்த கல்லால் ரவிக்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிக்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராம்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.