‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது இவர் புதிய படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த படத்தின் அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் பாடல்கள் முழு வேகத்தில் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் படக்குழு அனைவரும் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
#NaaisekarReturns songs getting composed in London, work in full swing! @Music_Santhosh is with the team including #VaigaiPuyal #Vadivelu, @Director_Suraaj, Lyca Productions founder #Subaskaran, Deputy chairman #Prem & Tamilnadu @LycaProductions head #GKMTamilkumaran 🎶🤩 pic.twitter.com/ar6G97a2gf
— Lyca Productions (@LycaProductions) January 12, 2022