Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

போதை பொருட்கள் விற்பனை…. பாய்ந்த குண்டர் சட்டம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

3 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் போதைப்பொருள் பழக்கத்தை கட்டுபடுத்தும் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி கடந்த 21.12.21 அன்று தூத்துக்குடி மத்திய பாகம் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையின் போது 21 கோடி மதிப்பிலான 21 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஹெராயின் போதைப் பொருள் கடத்தியதாக தருவைகுளம் பகுதியில் வசிக்கும் அந்தோணி முத்து, பிரேம்சிங், கசாலி மரைக்காயர் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் அந்தோணி முத்து, பிரேம்சிங், மரைக்காயர் ஆகிய 3 பேரையும் காவல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ததற்கான ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

Categories

Tech |