Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு படிப்பு வரவில்லை” மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடையார் காலனி பகுதியில் தண்டீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவதாரணி என்ற மகள் இருந்துள்ளார். இவர் வரதபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் பவதாரணி தனக்கு படிப்பு வரவில்லை என்றும், பள்ளி செல்ல விருப்பமில்லை என்றும் பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். அதற்கு பவதாரணியின் பெற்றோர் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, நன்றாக படிக்க வேண்டும் என அறிவுரை கூறியுள்ளனர்.

இந்நிலையில் பவதாரணி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த சமயம் பவதாரணியின் சகோதரன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பவதாரணி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.  அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பவதாரணியை உடனடியாக மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் பவதாரணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காங்கேயம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |