சிம்ம ராசி அன்பர்களே…!!! இன்று கவனமுடன் செயல்படவேண்டிய நாளாக இருக்கும். நண்பர்களுடன் வாக்குவாதங்கள் கொஞ்சம் தவிர்ப்பது நல்லத. சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. அலுவலகத்தின் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். இன்று தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உண்டாகும். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் என்ற எண்ணம் ஏற்படும். கூட்டுத் தொழில் வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. எல்லாவித ஆவணங்களையும் சரியாக வைத்துக் கொள்ளுங்கள்.
வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள். இன்று குடும்பத்தாருடன் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும். இன்று முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். ஆலய வழிபாடு மனநிம்மதியைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் மாணவர்கள் கடினமாக உழைத்து தான் படிக்க வேண்டும். படித்த பாடத்தை கொஞ்சம் நினைவில் வைத்துக்கொள்வதற்கு எழுதிப் பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் சலிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு