Categories
தேசிய செய்திகள்

தமிழகம் உட்பட 8 மாநிலங்களில்…. மத்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது .இதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 31-ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அனைத்து மாநிலங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா விதிமுறைகளான மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் கொல்கத்தாவில் கொரோனா தொற்று அதிக அளவில் உறுதியாகியுள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி 28 மாநிலங்களில் கொரோனாவை தொடர்ந்து ஒமைக்ரான் வைரஸ் தீவிரமடைந்து ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |