Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்த தந்தை…. என்ன காரணமா இருக்கும்?…. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் ராம்குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் மத்திய ரிசர்வ் படையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆனது. இவருக்கு சாக் ஷி என்ற மகளும் ஜானி என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ராம்குமார் பொங்கல் விடுமுறைக்காக பணியிடத்தில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தாம் இதுவரை அனுப்பிய பணத்திற்கு மனைவிடம் கணக்கு கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே உரையாடல் ஏற்பட்டு பின்னர் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராம்குமார் மனைவி தூங்கியுடன், பிள்ளைகளை தூக்கிச் சென்று கிணற்றில் வீசி கொலை செய்தார். அதன் பிறகு அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |