போகி பண்டிகை என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற பழமொழி. வீட்டில் இருக்கும் பழைய குப்பைகளை எல்லாம் எரிப்பது மட்டுமே போகி அல்ல. முந்தைய காலங்களில் வீட்டிற்கு வெள்ளை அடித்து, வீட்டில் இருக்கும் தேவையற்ற பழையை பொருட்களை உடைந்த முறம், நைந்துபோன துணிமணிகள், கிழிந்த பாய், தலையணை, துடைப்பம் மற்றும் கூடைகள் போன்ற வீண் பொருட்களைப் போட்டு எரிப்பது வழக்கம்.
மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகி பண்டிகைக்கு முந்தைய நாளே வீடு முழுவதும் தூசிகள் இல்லாமல் சுத்தமாக துடைத்து சுத்தம் செய்து வைத்துக் கொண்டால் மறு நாள் போகிப் பண்டிகையின் போது தேவையற்ற பொருட்களை மட்டுமல்லாமல் நம் மனதில் இருக்கும் தேவையற்ற கெட்ட விஷயங்களையும் எரித்து சிறப்பாக, மனமார, உணர்ச்சியோடு போகி பண்டிகையை கொண்டாட முடியும். போகம் என்றால் இன்பம், மகிழ்ச்சி என்கிற பொருள். போகம் என்கிற சொல்லுக்கு அதிபதியாக விளங்குபவர் இந்திர பகவான்.
விவசாயிகளுக்கு மழையைப் பொழியும் இந்திர பகவானை சிறப்பிக்கும் விழாவாக போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. தான் மழைப் பொழிவால் மட்டுமே விவசாயம் செழிக்கிறது என்கிற கர்வம் கொண்ட இந்திரனின் ஆணவத்தை அடக்க கோகுலகிருஷ்ணன் இந்திர வழிபாட்டை தடைசெய்து, கோவர்த்தன மலைக்கு வழிபாடுகள் செய்ய மக்களை திசை திருப்பினார்.அதனால் கோபமுற்ற இந்திரன் தொடர்ந்து ஏழு நாட்கள் விடாதே பெரும் மழை பொழிய செய்து மக்களைத் துன்புறுத்தினான்.
மக்களை காப்பதற்காக கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாக ஒற்றை விரலால் உயர்த்திப் பிடித்த இந்திரனின் கர்வத்தை அடக்கினார். ஆவணத்தை துறந்த இந்திரன் கிருஷ்ணரைப் அணியவே கிறிஸ்தவர் போகிப்பண்டிகை அன்று இந்திரா விழாவாக கொண்டாட வரமளித்தார். இந்திரன் மட்டுமல்லாது சுக்கிர பகவானும் போகத்திற்கு அதிபதியாக விளங்குகிறார். சுகபோக வாழ்க்கை பெற சுக்ர அருள் நமக்கு தேவை. ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருக்கும் பொழுது அவன் பணக்காரனாக இருக்கிறான். தேவையற்ற, வீணான, கழிந்த, புதிய மற்றும் பழைய ஆகிய சொற்களுக்கு காரகத்துவம் பெற்றுள்ளவர் சனீஸ்வர பகவான்.
தீயனவற்றை எரித்து உழைப்பின் பலனாக நல்லனவற்றை தரித்து சனி பகவான் அருளைப் பெற்றுக் கொண்டு விடியும் விடியல் புது பொலிவுடன், புதிய பொருட்களுடன், புதிய இல்லம், புதிய வண்டி மற்றும் வாகனம் என்று புத்தாடைகள் தரித்து புதிய பானையில் இனிப்பான சர்க்கரை பொங்கல் படைத்து சுக்கிர பகவானின் அருளையும் பெற்றுக் கொண்டு போன பழைய பொருட்கள் மற்றும் பழைய பிரச்சனைகளை தூக்கி எறிந்துவிட்டு வெளிச்சத்தை நோக்கிய புதிய சூரியனைக் காண வழிபடுவதே போகி மற்றும் பொங்கல் பண்டிகையின் தார்மீக காரணங்கள்.