Categories
தேசிய செய்திகள்

“என் பொண்டாட்டிக்கு குழந்தை இல்ல”…. அதுக்கு உங்க மாந்திரீகம் தான் காரணம்…. தம்பதி அடித்துக் கொலை….!!!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹண்டி மாவட்டம் சிம்லா என்ற கிராமத்தில் மங்லோ முண்டோ (60) அவரின் மனைவி லாங்டா ஹன்சபூர்தி (55) வசித்து வந்தனர். அவர்கள் அந்த கிராமத்தில் காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர். அது மட்டுமல்லாமல் அவ்வப்போது மாந்திரீகம் செய்யும் வேலையிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதியினர் வசித்து வந்த வீட்டிற்கு அருகே ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது. அந்த குடும்பத்தில் கணவன் மனைவி மட்டுமே இருந்துள்ளனர். அவர்களுக்கு குழந்தை இல்லை.

அது மட்டுமல்லாமல் அந்த பெண்ணுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்வீட்டு தம்பதியினர் மாந்திரீகம் வைத்து தனது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்படுத்தியதாகவும், தங்களுக்கு குழந்தை இல்லை எனவும் பக்கத்து வீட்டில் வசித்து வந்த அந்த நபர் கருதியுள்ளார். அதனால் மங்லோ- லாங்டாவுக்கும் அவர்களின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெண்ணின் கணவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஆண் நபர் தனது உறவினர்களை அழைத்துக் கொண்டு கடந்த 6ஆம் தேதி மாந்திரீகம் செய்யும் தம்பதியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது மனைவியின் உடல் நலக்குறைவுக்கும் குழந்தையின்மைக்கும்இவர்கள் மாந்திரீகம் செய்ததே காரணம் என்று எண்ணி அவர்களை கடுமையாக தாக்கியுள்ளார். அதனால் தம்பதியினர் ரத்தவெள்ளத்தில் சரிந்தனர். பிறகு அவர்களை அருகில் உள்ள காட்டுக்குள் வீசியுள்ளனர். படுகாயமடைந்த கணவன் மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து சந்தேகம் அடைந்த உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். அந்தப் புகாரை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பக்கத்து வீட்டுக்காரர் உறவினர்களுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. அதனால் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |