இடியாப்பம் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்;
சிக்கன் – 300 கிராம் சேமியா – 1 கப்
மலபார் மிளகு – 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி பட்டை – 1
ஏலக்காய் – 1
ஸ்டார் அனீஸ் – 1 stick குச்சி
கிராம்பு – 2
நெய் – 2 மேஜைக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பே இலை – 1 பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
உப்பு – 2 தேக்கரண்டி
இஞ்சி பேஸ்ட் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
தனியா தூள் – 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
தக்காளி – 2 பச்சை மிளகாய் – 3
புதினா இலைகள் – 1/2 கப்
வெங்காயம் – 3
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
தண்ணீர் – 2 கப்
செய்முறை;
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, தனியாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.ஒரு கடாயில்,இலவங்கப்பட்டை, பச்சை ஏலக்காய், மலபார் மிளகு, கிராம்பு,நட்சத்திர சோம்பு, பெருஞ்சீரகத்தை போட்டு வாசனை வரும் வரை நன்றாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.கடாயில் சேமியாவை போட்டு வறுத்து ஆறவைத்து.
அதே கடாயில் எண்ணெய் விட்டு, கருப்பு சீரக விதைகள், பே இலைகள், பச்சை மிளகாய், புதினா இலைகள், வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கி அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் சிவப்பு மிளகாய் தூள், அரைத்த மசாலா தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், சிக்கன் சேர்த்து நன்றாக கலந்து, மூடி போட்டு வேக விடவும்.சிக்கன் நன்றாக வெந்தபிறகு அதில் தண்ணீர், உப்பு, வறுத்த சேமியா ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் மூடி வைத்து சமைக்கவும்.
கடைசியாக அடுப்பை அணைத்துவிட்டு, 5 நிமிடங்கள் தம்மில் வைத்ததுவிட்டு பின் பரிமாறவும்.ருசியான சிக்கன் இடியாப்பம் பிரியாணி ரெடி.