Categories
அரசியல் மாநில செய்திகள்

மறைந்தது மதுரையின் அடையாளம்…. முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ். ராம்பாபு திடீர் மரணம்…. சோகம்….!!!!

மதுரை மக்களவை தொகுதியின் முன்னாள் எம்.பி., ஏ. ஜி.எஸ். ராம்பாபு திடீரென காலமானார்.

மதுரையின் அடையாளங்களில் ஒன்றான சவுராஷ்டிர சமூகத்தினரின் பிரதிநிதியாகவும், அசைக்க முடியாத அரசியல்வாதியாகவும் வலம் வந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏ.ஜி. சுப்புராமன் இரண்டு முறை மதுரையின் எம்.பி.யாக இருந்துள்ளார். மேலும் சவுராஷ்டிர சமூகத்தினர் இவருடைய காலத்தில் தான் மிகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் மதுரைக்கு பல நலத்திட்டங்களையும் கொண்டு வந்த பெருமை சுப்புராமனுக்கு உண்டு.

சுப்புராமனின் மறைவுக்கு பிறகு அவருடைய மகன் ஏ.ஜி.எஸ் ராம்பாபு அரசியலில் அடியெடுத்து வைத்தார். மேலும் தந்தையை போலவே இவரும் மதுரையில் தனிப்பெரும் தலைவராக விளங்கினார். அந்த வகையில் 1989-ஆம் ஆண்டு முதல் 1998-ஆம் ஆண்டு வரை ராம்பாபு மதுரையின் எம்.பி.யாக கொடிகட்டி பறந்தார். அதாவது இதுவரை மதுரைக்கு கிட்டத்தட்ட 17 எம்.பி.க்கள் கிடைத்துள்ளனர்.

ஆனால் ஏ.ஜி. சுப்புராமனும், ஏ.ஜி.எஸ். ராம்பாபுவும் தான் அதிகபட்சமாக எம்.பி.களாக இருந்துள்ளனர். அந்த வகையில் மதுரையின் எம்.பி.யாக தந்தை இரண்டு முறையும், மகன் மூன்று முறையும் இருந்து சாதனை படைத்துள்ளனர் என்பது மதுரையின் இன்னொரு அடையாளமாக போற்றப்படுகிறது. இந்நிலையில் ராம்பாபுவின் இந்த திடீர் மரணம் சவுராஷ்டிர சமூகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |