Categories
சினிமா

“இங்கையும் நம்ம உலகநாயகன் தான்!”….. தந்தையாக நடித்து அசத்திய ஹீரோக்கள்….!!!

தமிழ் திரையுலகில் தந்தை-மகன் பாசத்தை குறிக்கும் வகையில் வெளியான திரைப்படங்களில் முன்னிலையில் இருக்கும் 8 திரைப்படங்களை பார்ப்போம்.

இந்த வரிசையில், முதலிடத்தில் இருப்பது உலகநாயகன் கமலஹாசன் நடித்து, இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் திரைப்படம். இதில், நடிகர் கமலஹாசன் தந்தை மகன் ஆகிய இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். தந்தை கதாபாத்திரத்தில், சுதந்திர போராட்ட தியாகி சேனாதிபதியாக, நடித்திருப்பார்.

மேலும், மகன் சந்துரு செய்யும் முறைகேடுகளுக்காக மகனையே கொலை செய்யும் தந்தையாக நடித்து அசத்தியிருப்பார். இத்திரைப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதும் கிடைத்தது. இரண்டாவது இடத்திலிருக்கும் திரைப்படம், “தேவர் மகன்”-இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தந்தையாகவும் உலகநாயகன் கமலஹாசன் மகனாகவும் நடித்திருப்பார்கள்.

இதில் சிவாஜிகணேசனின் கதாபாத்திரம் பலரால் போற்றப்பட்டது. இத்திரைப்படத்திற்காக சிவாஜி கணேசனுக்கு தேசிய விருது கிடைத்ததோடு, திரைப்படம் ஆஸ்கார் பரிந்துரை செய்யப்பட்டது. அடுத்த இடத்தில் இருப்பது, “தவமாய் தவமிருந்து” இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், தந்தையாக நடித்திருப்பார்.

ஒரு சாதாரண குடும்பத்தில், பிள்ளைகளை வளர்க்க பெற்றோர் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை இத்திரைப்படம் காண்பித்திருக்கும். அடுத்ததாக, “எம்டன் மகன்”- இத்திரைப்படத்தில் நாசர் தந்தையாகவும், பரத் மகனாகவும் நடித்திருப்பார்கள். மகன் மீது அதிக அன்பை மனதில் வைத்துக்கொண்டு, கோபத்தை மட்டுமே வெளியில் காட்டும் தந்தையாக நாசர் நடித்திருப்பார்.

அடுத்ததாக, “வாரணம் ஆயிரம்”- இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி, நடிகர் சூர்யா தந்தை மற்றும் மகனாக இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் அப்பாவை தன் முன்னுதாரணமாக பார்க்கும் மகன், அப்பாவின் காதலால் ஈர்க்கப்பட்டு தானும் அதேபோன்று காதலிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருப்பார்.

மேலும், ஒரு மகன் தன் அனைத்து விஷயங்களையும் தந்தையுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதை அழகாக காட்டியிருக்கும் இத்திரைப்படம். அடுத்ததாக, “சந்தோஷ் சுப்பிரமணியம்” – குடும்பத்தின் மீது அளவுக்கு அதிகமாக அன்பு வைத்திருக்கும் தந்தை, தன் மகனை எந்த அளவிற்கு அதீத அன்பை கொடுத்து வளர்க்கிறார் என்பதை காண்பித்தததோடு, இதனால், மகன் தன் வாழ்வில் தனித்து முடிவெடுக்க முடியாமல் திணறுவதையும் காட்டியிருக்கும் இத்திரைப்படம்.

அடுத்ததாக, “வரலாறு” இத்திரைப்படத்தில், அஜீத், தந்தை மற்றும் இரண்டு மகன்களாக மூன்று வேடங்களில் நடித்திருப்பார். தன் சாயல் போல் தன் மகன் இருந்துவிடக் கூடாது என்று நினைக்கும் ஒரு தந்தையின் போராட்டங்களை அழகாக காட்டியிருப்பார்கள். அடுத்ததாக “முத்துக்கு முத்தாக”- இத்திரைப்படத்தில், நடிகர் இளவரசு தந்தையாக நடித்திருப்பார். ஐந்து மகன்களை கஷ்டப்பட்டு வளர்க்கும் தந்தையின் அன்பை காட்டியிருக்கும்.

Categories

Tech |