Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மதுக்கடைகளில் ஃபுல் ஸ்டாக்…. குஷியில் மது பிரியர்கள்….!!!!

தமிழர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல். இது தமிழர்களுக்கு மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பொங்கலையொட்டி சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் இன்றும், நாளையும் மது விற்பனை களைகட்டும். அதனால் டாஸ்மாக் கிடங்குகளிலிருந்து மது கடைகளுக்கு அதிகளவில் மதுவகைகள் சப்ளை செய்யப்பட்டு வருகின்றது. தமிழக அரசின் கீழ் செயல்படும் டாஸ்மாக் நிறுவனம் 5,410 சில்லறைக் கடைகள் மூலம் பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்து வருகிறது. பொதுவாக அவற்றில் நாள்தோறும் சராசரியாக 100 கோடி ரூபாய்க்கும், வாரவிடுமுறை நாட்களில் அதை விட அதிகமாகவும் மது வகைகள் விற்பனையாகின்றன.

இந்நிலையில் நாளை மறுநாள் திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மறுநாள் 15_ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு. இதையடுத்து வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு 18-ஆம் தேதியும் விடுமுறை. எனவே குடிமகன்கள் விடுமுறை நாட்களுக்கும் சேர்த்து நேற்று முதல் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வருகின்றனர். குறிப்பாக இன்றும், நாளையும் மது விற்பனை அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்றும், நாளையும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலிருந்து உயர் அதிகாரிகள், மாவட்ட மேலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

Categories

Tech |