விழுப்புரம் மாவட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு நியாய விலைக் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். அப்போது அவருடன் திமுக எம்.எல்.ஏ புகழேந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.கக்கன் நகர் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளை ஆய்வு செய்தபோது பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் இருந்ததை கண்ட அமைச்சர் பொன்முடி வாகனத்திலிருந்து இறங்கி அவர்களுக்கு முகக்கவசங்களை வழங்கினார். மேலும், கொரோனா மற்றும் ஒமைக்கரான் நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது, சுமார் ஐந்து வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று தனக்கும் முகக்கவசம் வழங்கக்கோரி அமைச்சரிடம் கையை நீட்டியது. அப்போது “உனக்கெல்லாம் மாஸ்க் எதற்கு” என தனது கையை ஓங்கியபடி அமைச்சர் மிரட்டியதை கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனை சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதை அடுத்து அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.