Categories
சினிமா தமிழ் சினிமா

போடு தகிட தகிட!…. ‘பீஸ்ட்’ படத்திலிருந்து…. வெளியான செம அப்டேட்….!!!!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் ராணுவ உளவு அதிகாரியாக நடிக்கிறார் என்றும், பீஸ்ட் பட கதை தங்கம் கடத்தலை அடிப்படையாக கொண்டது என்றும் ஹாலிவுட்டில் தகவல்கள் சில உலாவி வருகிறது. அதேபோல் ‘பீஸ்ட்’ படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாக உள்ளதாகவும் கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வந்தது. மேலும் ‘பீஸ்ட்’ படத்தின் அப்டேட் பொங்கல் அன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில் பீஸ்ட் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். அதுவே பொங்கல் அன்று வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெய்ப்பூரில் பீஸ்ட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்ததாகவும், நேற்றுடன் அது நிறைவடைந்ததாகவும் புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஏப்ரல் மாதம் சம்மர் ட்ரீட்டாக ‘பீஸ்ட்’ படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |