தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெற இருந்த தேசிய திறனாய்வு தேர்வு வருகிற 29ம் தேதியன்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு 23ஆம் தேதி நடக்க இருந்தது.
ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த தேர்வு 29க்கு மாற்றப்பட்டுள்ளது. ஆகவே தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டுகளை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 19ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.