மாஸ்க் அணியாதவர்களுக்கு விதித்த அபராதத் தொகை 500 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ரூபாய் 200 லிருந்து 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகை காலத்தில் தொற்று பரவல் அதிகரிக்காமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.