நேபாளத்தில் தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கான அட்டை மக்களிடம் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் மக்கள், தடுப்பூசி செலுத்த வரிசையில் காத்திருக்கிறார்கள்.
நேபாளத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. எனவே, அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மக்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தற்போது அரசு, தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கான அட்டை கட்டாயமாக இருக்கவேண்டும் என்று அறிவித்தது. எனவே, மக்கள் நீண்ட நேரமாக தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக வரிசையில் காத்திருக்கிறார்கள்.