Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி…. சைபர் கிரைம் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணைய நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பூஸ்டர் டோஸ் செலுத்த செல்போன் அழைப்பு, குறுஞ்செய்தி மூலம் தொடர்புகொண்டு பண மோசடி செய்து வருகின்றனர். அதாவது செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் லீன்க் ஒன்றில் விவரங்களை பதவிட்டு ஓடிபி எண் கேட்டுப் பெற்று பண மோசடி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே செல்போன் அழைப்பு, குறுஞ்செய்திகளை நம்பவேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |