Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“அவங்க மேல நடவடிக்கை எடுக்கனும்” மனைவி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனைவி புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார். இவர் அவினாசி அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சந்தியாவும் அவரது உறவினர்களும் அவினாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் கொடுத்துள்ளனர்.

அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கும் கருமாபாளையம் பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவருக்கும் கடந்த 15.11.2021 அன்று முறைப்படி திருமணம் நடந்தது. இந்நிலையில் எனது கணவர் அவரது குடும்பத்தினரின் பேச்சை கேட்டு என்னை பெண் என்றும் பாராமல் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிப்பை உண்டாக்கி என்னுடன் வாழ மறுக்கிறார். எனவே எனது கணவர் மீதும் அவரது உறவினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சந்தியா புகார் மனுவில் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |