வெவ்வேறு இடங்களில் நடத்திய வாகன சோதனையில் 1 கோடி மதிப்பிலான 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் முதலைபட்டி அருகே உள்ள சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக நாமக்கலை நோக்கி சென்ற கார் ஒன்றை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது காரில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்த முகேஷ், முருகன், ஜெயசந்திரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரில் 200 கிலோ கஞ்சாவையும் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
இதேபோல் குமாரபாளையம் கத்தேரி ஜங்ஷன் பகுதியில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் சேலத்தில் இருந்த வந்த 2 காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது காரில் சுமார் 100 கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் காரில் இருந்த கோவையை சேர்ந்த சுல்தான், அப்துல் ஜலீல், கிஷோர் குமார், முஜிப் ரகுமார் ஆகிய 4 பேரையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் வெவ்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 300 கிலோ கஞ்ஜாவின் மதிப்பு 1 கோடி இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் மற்றும் துணை சூப்பிரண்டு அதிகாரி சுரேஷ் ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை பார்வையிட்டுள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 7 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.